jeevan-works-logo
booked.net
தமிழகத்தின் பெருமை சேலம் இரும்பு ஆலை தனியார் வசம் ஒப்படைப்பு! டெண்டர் கோருகிறது அரசு!!

Published: Friday, Jul 05,2019 ,05:46:49pm

 சேலம் இரும்பு ஆலையை  தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான சர்வதேச டெண்டர் அறிவிப்பு வெளியானதால், அதன் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

 

ஆலையின் வரலாறு : 

சேலம் இரும்பு ஆலை என்பது  பல தலைவர்கள் முயன்று போராடிய தமிழகத்திற்கு கொண்டு வந்த ஒரு திட்டமாகும். தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர்,  மத்திய அரசிடம் போராடி பெற்றது இது. 81ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டது இந்த ஆலை. ஏறக்குறைய 3000 விவசாயிகள் தங்கள் நிலத்தை இந்த அழகாக வழங்கியுள்ளனர்.  கஞ்ச மலையில் உள்ள இரும்பு தாதுக்கள் எடுத்து பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டது இந்த உருக்கு ஆலை. 

நஷ்டம் :

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார் பன் சீட் ஸ்டீல் ஆகியவை இவ்வாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ரயில் பெட்டி தயாரிப்பதற்கு தேவையான இரும்பு தகடுகள்,  நாணயம் தயாரிப்பதற்கு தேவையான இரும்பு தகடு விலைகள் ஆகியவையும் இந்த சேலம் இரும்பு ஆலையில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. சேலம் இரும்பாலையில் நேரடி தொழிலாளர்களாக 2,000 பேரும், ஒப்பந்த மற்றும் மறைமுக தொழிலாளர்களாக 3000 பேரும் பணியாற்றி வருகின்றனர் . இவ்வளவு சிறப்பு வாய்ந்த சேலம் இரும்பாலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.   அரசின் போதிய ஈடுபாடு இல்லாததாலேயே இவ்வாறு நஷ்டத்தில் இயங்கி வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

தனியாருக்கு தாரைவார்ப்பு  :

கடந்த சில வருடங்களாகவே சேலம் இரும்பாலை தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வந்தது.  தொழிலாளர்கள் மற்றும் சேலம் பகுதி மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அது திட்டம் தள்ளிப்போடப்பட்டு வந்தது.  இசை நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க சர்வதேச அளவிலான டெண்டரை கூறியிருக்கிறது.  இதை கண்டித்து தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரும் ஆகஸ்ட் 1 வரை இதற்கான விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.  இது ஒரு சர்வதேச டெண்டர் ஆகையால் உலகின் எந்த நிறுவனமும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

 அறிவிப்பின் மூலம் 3000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

வீடியோ செய்திகள்