jeevan-works-logo
booked.net
சிறைச்சாலைக்குள் நிகழ்ந்த கொலை. RSS / BJP தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை !!

Published: Friday, Jul 05,2019 ,06:09:15pm

கடந்த 2004ஆம் வருடம் கேரள மாநிலம் கண்ணூர் சிறைச்சாலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கேபி இரவீந்திரன் என்பவர் அதே சிறைச்சாலையில் இருந்த ஒன்பது ஆர்எஸ்எஸ் பிஜேபி தொண்டர்கள் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

தலைச்சேரி கூடுதல்  நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஒன்பது குற்றவாளிகளான,  பவித்திரன், பல்குனன், சனல் பிரசாத், கே பி ரகு, பி கே தினேஷன்,  கே சசி, சுனி, அசோகன் மற்றும் அனில் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.  மேலும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய பிரம்பாத் ஜோதிஷ்  என்பவர் இறந்து விட்டார். 

 இந்த தாக்குதல் நடைபெற்ற போது சிறையில் இருந்த 31 ஆர்எஸ்எஸ் பிஜேபி தொண்டர்களும் இக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.  ஆனால் இந்த 9 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வீடியோ செய்திகள்