jeevan-works-logo
booked.net
12 ராசிகளுக்குமான தின பலன்: [06.07.2019] விபத்து குறித்த எச்சரிக்கை எந்த ராசிகளுக்கு?!

Published: Friday, Jul 05,2019 ,08:08:41pm

மேடம்:

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.  தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  முக்கிய முடிவுகள், வாக்குறுதிகள் என்று அளிக்காதீர்கள்.  சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். விநாயகரை வணங்கி நலம் பெறுங்கள். 

ரிஷபம்:

 அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பார்கள்.  இளைய சகோதரன் தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  உறவினர்கள் நண்பர்கள் உங்கள் அறிவுரையை கேட்டு செயல்படுவார்கள். 

மிதுனம் :

நெருங்கிய உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.  முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அறிமுகம் இன்று கிடைக்கக்கூடும்.   சகோதரர்கள் குழந்தைகளால் திடீர் செலவு ஏற்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நாளைவரை பொறுத்திருங்கள். 

கடகம் : 

யாருக்கேனும் கடன் அளிக்க உத்தேசித்து இருந்தால் சற்று யோசித்து செய்யுங்கள்.  பங்குதாரர்கள் ஒரு சமூகப் போக்கை கடைப் பிடியுங்கள். கணவன் மனைவியிடையே சிறு சிறு  விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நன்மை தரும். 

சிம்மம்: 

எதிர்பாராத பண வரவிற்கும் செலவுக்கும்  இன்று வாய்ப்பு இருக்கிறது. மனைவி பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தொழிலிலேயே இருப்பவர்களால் என்று உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். 

கன்னி: 

பிற்பகலுக்கு மேல் தேவையற்ற செலவுகள் வந்து சேரும்.  புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதை சற்று ஒத்தி வையுங்கள்.  சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு இருக்கிறது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள் இன்று. 

 துலாம்: 

எதிரிகளால் இதுவரை இருந்துவந்த தொல்லைகள் நீங்கும் நாள்.  தாய்மாமன் உடன்பிறந்தோர் வகையில் எதிர்பாராத . அனுகூலங்கள் கிடைக்கும்.  அரசாங்க ரீதியான காரியங்கள் சாதகமாக முடியும் நாள் இன்று. 

விருச்சிகம்: 

தந்தை,  மூத்த சகோதரன் வழியில்   நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் செய்யுங்கள்.  பிற்பகலில் புதிய நண்பர்கள் அறிமுகம், பழைய நடைபெற வாய்ப்பு இருக்கிறது.  பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும் நாள் இன்று.  

தனுசு: 

வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டிய நாள் இன்று.  வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் ஏற்படும்.  பயணங்களில் கவனமாக இருங்கள். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்  கொள்ளுங்கள். ஒரே தொழில் செய்யும் நண்பர்களால் பலன் உண்டு இன்று. .  

மகரம்: 

சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு உண்டு.  வியாபாரம் சாதாரணமாக நடக்கும் ஓரளவு லாபம் உண்டு. உடன்பிறந்தவர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டும்.  கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும் நாள் இன்று. 

கும்பம்: 

மனைவி வழியில் லாபம் கிடைக்கும் நாள்.  புதிய முயற்சிகளுக்கு நாளைவரை பொறுத்திருங்கள்.  உடன் பணிபுரிபவர்கள், உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் தன்மையாக  நடந்து கொள்ளுங்கள். 

மீனம்: 

 உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களால்  எதிர்பாராத செலவு ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடும்போது உணவு தரமானதாக இருக்கிறதா என்று சரி பார்த்து சாப்பிடுங்கள்.  வயிற்றுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

வீடியோ செய்திகள்