jeevan-works-logo
booked.net
கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் டீசல் விலையை ஏற்றுகிறோம். நிர்மலா சீதாராமன் கூறும் வித்தியாசமான லாஜிக்?!!

Published: Saturday, Jul 06,2019 ,12:19:30pm

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.  கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதால், கலால் வரியை உயர்த்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். 

 இதனால் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசலுக்கான விலை உயர்வு அமலுக்கு வந்தது.  சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்த்தப்பட்டு 75 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசுகள் உயர்த்தப்பட்டு 70 ரூபாய் 48 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், அதனால் உண்டான பலனை பயனீட்டாளர்களுக்கு  அளிக்காமல் மத்திய அரசு விலையை உயர்த்தி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

 சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. 

இனி வரும் காலங்களில் சொந்தமாக வாகனம் வைத்து,  பெட்ரோல் டீசல் போட்டு, இந்த பைத்தியம் பிடித்த அரசாங்கங்கள்  விதிக்கும் வரி அனைத்தையும் கட்டி, சுங்கச்சாவடி கட்டணங்களைச் செலுத்தி,  நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் யாரும் வாழ்வது கடினம். இந்த உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 

 சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கிறதாம்.  ஆகவே விலையை ஏற்ற இது தான் சரியான தருணமாம்.. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருக்கும் போது இதே வாய் என்ன சொல்லும்?  கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருக்கிறது... அதனால் விலை ஏற்றுகிறோம் என்று சொல்லும். ஆக எப்படி இருந்தாலும் விலை உயரும்... இதை நமது மரமண்டைகளில்  ஏற்றிக் கொள்வோமேயானால், நமக்கு கோபமே வராது. 

வீடியோ செய்திகள்