jeevan-works-logo
booked.net
முகிலன் மீதான பாலியல் வழக்கை நாம் எப்படி பார்க்க வேண்டும். பியூஷ் மானுஷ் தரும் விளக்கத்தை பார்த்துவிட்டு முகிலன் மீது முடிவெடுங்கள்...

Published: Tuesday, Jul 09,2019 ,01:24:34pm

முகிலன் மீது  திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(37) என்ற   பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அதில், தான் முகிலன் செய்துவந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டதாகவும் , அவருடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.  முகிலன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, தன்னுடன் பல முறை உடலுறவு கொண்டதாகவும், பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.  

தற்போது போலீஸார் முகிலனை,  பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர்.  விரைவில் முகிலன் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படலாம் என்று தெரிகிறது. 

முகிலனைப் பற்றி உடனடியாக ஒரு முடிவுக்கு வரும் முன்பாக,  சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவை அனைவரும் பார்த்துவிடுவது நல்லது. 

பியூஷ் மானுஷ் வெளியுட்டுள்ள வீடியோ பதிவு

 மிகப்பெரிய மாபியா கும்பல் மீது சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் முகிலன் போன்ற தனி நபர்கள் மீது எவ்வாறு அவதூறுகள் பரப்பப்படுகின்றன,  அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து பியூஸ் மானுஷ் அவர்கள் மிகச் சரியான நேரத்தில் ஒரு தரமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்கள். 

 முகிலன் அந்த பெண்ணுடன் உண்மையில் உடலுறவு கொண்டு இருந்தாலும் கூட,  அதை அவர்களது தனிப்பட்ட விஷயமாகவே கொள்ள வேண்டும். இத்தனை நாள் இல்லாமல்,  முகிலன் போராடி வந்த விஷயங்கள் பூதாகரமாக வேகம் எடுத்து வந்த நிலையில், இந்த பெண் திடீரென்று பாலியல் பலாத்கார புகார் அளிக்க வேண்டிய காரணம் என்ன. 

 பியூஸ் மானுஷ் தனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.  அவர்களைப் போன்ற சமூக ஆர்வலர்களை வாழ்விப்பது பொது மக்களின் அன்பு அன்பு அன்பு மட்டுமே.  மக்களின் மீது நாம் நமது அன்பை தெரிவிக்க வேண்டிய நேரம் இது. 

செய்தி வரலாறு...

2019 பிப்ரவரி மாத தோடு காணாமல் போன முகிலன்,  திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப் படுகிறார்.  கைது செய்து அழைத்துப் போகும் போது, நான் கடத்தப்படுகிறேன்,  துன்புறுத்தப்பட்டேன், அடைத்து வைக்கப்பட்டேன் என்றெல்லாம் அவர் கோஷமிடும் காட்சிகள் வெளியாகின. 

 இன்று அவர் தமிழக சிபிசிஐடி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,  அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 இது தொடர்பாக சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி  ரயில் நிலையத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த நபரை,  ரயில்வே போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது அவர் தனது பெயர் முகிலன் என்றும்,  தன் காட்பாடி செல்ல விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

 இரவு பத்து முப்பது மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அவரை,  சிபிசிஐடி அதிகாரிகள் பார்த்து அவர் காணாமல் போன முகிலன் என்பதை உறுதி செய்தனர்.  இன்று அதிகாலை எழும்பூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட முகிலன்,  அவர் காணாமல் போன காலகட்டத்தில் எங்கு இருந்தார் என்று விசாரித்தபோது அது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மேலும்,  மக்கள் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல்வல்லுறவு புகாரின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் முடிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

விசாரணையின்போது முகிலன்,  தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார்.  அதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி,  காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் ஆணையிட்டிருக்கிறார்.  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு, சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

வீடியோ செய்திகள்