jeevan-works-logo
booked.net
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முடங்கியது! தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று தகவல்…

Published: Monday, Jul 08,2019 ,08:48:13pm

என்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதளம் முடங்கியிருக்கிறது.  பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெறும் இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. 

ஜூலை 3 முதல் ஏழாம் தேதி வரை  முதல் சுற்றில் மாணவர்கள் தங்கள் கலந்தாய்வுக்கான பதிவு கட்டணத்தை செலுத்தி விட்டனர்.  ஜூலை 8 முதல் 10 தேதி வரையிலான மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் படிப்பை பிரிவை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

www.tneaonline.in இணைய தளத்தில் மாணவர்கள்  தங்கள் விருப்பப் பாடங்கள் மற்றும் கல்லூரிகளை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் எட்டாம் தேதி காலை முதல் இந்த இணையதளம் முற்றிலுமாக வேலை செய்யவில்லை.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைய தளம் வேலை செய்யவில்லை என்று மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர். முதல் சுற்று மாணவர்களுக்கான காலஅவகாசம் ஜூலை 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த முதல் சுற்று மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 9500 ஆகும். இணையதள கோளாறு காரணமாக தங்கள் முடிவு செய்து வைத்திருந்த கல்லூரிகள் வேறு மாணவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் இடையே நிலவி வருகிறது. 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும்,  மாணவர்கள் தேவையில்லாத பீதிக்கு ஆளாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வீடியோ செய்திகள்