jeevan-works-logo
booked.net
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து கிடையாது.. கேரள சிறைத்துறை ஏடிஜிபி ரிஷிராஜ் சிங் அதிர்ச்சி தகவல்

Published: Wednesday, Jul 10,2019 ,12:45:49pm

நடிகை ஸ்ரீதேவி 2018 பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்க சென்ற பொழுது,  ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கேரளா சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்த தடைய அறிவியல் மருத்துவ நிபுணர்   உமாநாதனிடம் விவரங்களை கேட்டு அறிந்தேன். அவர் கூறியது என்னவென்றால், பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளது. ஸ்ரீதேவி, அளவுக்கதிகமாக மது அருந்தி இருந்த போதும்,  ஒரு அடி மட்டுமே ஆழமுள்ள ஒரு குளியல் தொட்டி தண்ணீரில் அவராக மூழ்க முடியாது. சிலர் அழுத்தம் தராமல், ஒரு நபரின் கால்களையோ அல்லது தலையையோ ஒரு அடி தண்ணீரில் மூழ்க அடிக்க முடியாது. ஆகவே, இது ஒரு கொலையாக இருக்கலாம் -  என்று உமா நாதன் கூறியதாக தெரிவித்திருக்கிறார். 

 என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...

வீடியோ செய்திகள்