jeevan-works-logo
booked.net
கௌரவக் கொலைகளை தடுக்க செய்தது என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி…

Published: Wednesday, Jul 10,2019 ,01:13:30pm

 சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர்  வழக்குகளை விசாரிக்க தொடங்கும் முன்பாக கோர்ட்டில் ஆஜராகி இருந்த அரசு தரப்பு வக்கீலிடம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். 

கௌரவ கொலைகளை தடுக்க  உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  அந்த உத்தரவுகளை எல்லாம் தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தி இருக்கிறதா?   இதுகுறித்து பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.  இது தொடர்பாக நாங்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறினார். 

 பிற்பகலில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி,  அட்வகேட் ஜெனரல் வெளியூரில் இருப்பதால், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

 இதற்கு நீதிபதிகள்,  கௌரவ கொலைகள் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது என்பதை அடையாளம் காண வேண்டும் என அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? கௌரவக் கொலைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர். 

 கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 81  கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கொடுமையை தடுத்திருக்கலாம்.  என்று கூறிய நீதிபதிகள் வருகிற 22ம் தேதிக்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

தர்மபுரி இளவரசன் தொடர்ந்து,  ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர்  என்று தமிழகத்தில் இந்த சாதி ஆணவக் கொலைகள் தொடர் கதையாகி வருகிறது. 

முதலில்,  இந்த கொடூரத்தை கவுரவக் கொலை என்று கூறி வருவதை தடை செய்ய வேண்டும்.  சாதி ஆணவக் கொலை என்பதே இதற்கு சரியான பதம். 

வீடியோ செய்திகள்