jeevan-works-logo
booked.net
வனிதாவிற்கும் எனக்கும் உள்ளது என்ன உறவு… டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் விளக்கம்.

Published: Wednesday, Jul 10,2019 ,01:33:52pm

விஜயகுமார் மகள் நடிகை வனிதா,  பிக் பாஸில் போட்டியாளராக வந்தாலும் வந்தார்..  சமூக வலைதளங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், வனிதாவின் மூன்றாவது கணவர் என்று வெளிவந்த தகவல்களுக்கு,  ராபர்ட் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். 

வனிதா உடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து,  அப்படத்தில் நடிக்கவும் செய்ததாகவும், அப்பொழுது அவர் தன்னை காதலிப்பது போல தவறான பல தகவல்களை பரப்பியதாகவும்  கூறியிருக்கிறார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று வனிதாவை கேட்ட பொழுது, படத்தின் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறேன்.  கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள், என்று கூறியதாக ராபர்ட் தெரிவித்திருக்கிறார். 

 வனிதா 2000 ஆண்டு நடிகர் ஆகாஷை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார்.  2007இல் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார்.  ஆனந்தராஜ் மூலம் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.  

வனிதா தயாரித்திருந்த ஒரு படத்தில் ராபர்ட் நடித்திருந்தார்.  அப்போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் ராபர்ட் இப்பொழுது இத்தகவலை மறுத்திருக்கிறார்.  ஆனபோதும் ராபர்ட் தன் கையில் வனிதா என்று பச்சை குத்தி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதாம்.

வீடியோ செய்திகள்