jeevan-works-logo
booked.net
திருமுருகன் காந்தியை பின்னாலிருந்து இயக்குவது யார்? விசாரிக்க போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

Published: Wednesday, Jul 10,2019 ,01:43:32pm

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது,  இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,  அரசு தரப்பு மாநில தலைமை குற்றவியல் வக்கீல்  ஏ நடராஜன், திருமுருகன் காந்தி எப்போதும் மாறுபட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும்,  இவர் தெரிவிக்கும் கருத்துக்களால் மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மீது பொதுமக்களுக்கு தவறான எண்ணங்கள் உருவாகிவிடுகின்றன என்றும்,  இவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். 

 திருமுருகன் காந்தி தரப்பில் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று  வாதிடப்பட்டது. 

 இதையடுத்து  நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில்,   திருமுருகன் காந்தி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும்  எஃப் ஐ ஆர் தகவல்களை வைத்து பார்க்கும்போது முரண்பட்ட கருத்துக்களை மனுதாரர் தொடர்ந்து பேசி வருவது தெளிவாக தெரிகிறது.  அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பல அமைப்புகள் தமிழ்நாட்டை அழிக்க முயற்சி செய்கிறது என்று அவர் பேசி வருகிறார்.   உச்சநீதிமன்றம் மற்றும், அவர் விமர்சித்துள்ளார். ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை தான், மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. அதற்காக எல்லை மீறி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாத. 

 அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது.  அதற்காக விரும்பத்தகாத அருவருப்பான கருத்துகளை தெரிவிக்க அரசியலமைப்புச் சட்டம் யாருக்கும் உரிமை வழங்கவில்லை. 

 எனவே திருமுருகன் காந்தி மீது உள்ள வழக்குகளை ரத்து செய்ய முடியாது.  அதே நேரம், திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்தும் அவரை பின்னால் இருந்து யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும் , என்று அறிவித்தார்.

வீடியோ செய்திகள்