jeevan-works-logo
booked.net
பாதியில் நின்ற அரையிறுதி ஆட்டம். நியூசிலாந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் நின்றது.

Published: Wednesday, Jul 10,2019 ,03:52:40pm

 இங்கிலாந்தில் நடந்துவரும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  மான்செஸ்டரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதியது. 

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.  நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும் , ஹென்றி  நிக்கோல்சும் விளையாடினார். 

கப்தில்   பும்ராவின் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் வில்லியம்சன் களம் புகுந்தார்.  இருவரும் நிதானமாக ஆடினர். 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர். 

28 ரன்கள் எடுத்த நிலையில் நிக்கோலஸ்  ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.  இதைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் வில்லியம்சன் உடன் இணைந்தார். 

இப்படியாக நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் 100  ரன்களை தொட்டது. அணியின் ஸ்கோர் 211 ஆக இருந்தபோது விட்டுவிட்டு போய் the மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. 

இன்றும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால்,  லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றதன் அடிப்படையில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

வீடியோ செய்திகள்