jeevan-works-logo
booked.net
ஹாங்காங் நாட்டின் கைதிகள் பரிமாற்ற சட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.. கைதிகள் பரிமாறப்பட போவது இல்லை..

Published: Wednesday, Jul 10,2019 ,02:08:18pm

 ஹாங்காங்  இப்பொழுதும் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை,  சீனாவுக்கு நாடு கடத்தி சீனாவில் வைத்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக ‘ கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. 

இதைக் கண்ட  ஹாங்காங் மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.  மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சியாக தொடர்ந்து நடந்து வந்த இப்போராட்டத்தின் பலனாக இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் அரசாங்கம் அறிவித்தது.  ஆனாலும் மசோதாவைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்த முடியாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

 பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இப்போராட்டம் நிர்வாகத் தலைவர் கேரி லாம்  அவர்களின் நேற்று அறிவிப்போடு ஒரு முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ மக்கள் அரசாங்கத்தின் நேர்மை குறித்து சந்தேகப்படுகிறார்கள்.  நான் வலியுறுத்திச் சொல்கிறேன், இந்த மசோதா குறித்த பணியில் மீண்டும் அரசு ஈடுபடாது. அந்த மசோதா அவன் கதை முடிந்து விட்டது” என்று தெரிவித்திருக்கிறார். 

 ஆனால்,  போராட்டக்காரர்களது மேலும் ஐந்து கோரிக்கைகளை ஹாங்காங் நிர்வாகம் நிறைவேற்ற வராத வரையில் எங்களது போராட்டம் தொடரும்  என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

வீடியோ செய்திகள்