jeevan-works-logo
booked.net
விதி எண் 110 இன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றார்:

Published: Thursday, Jul 11,2019 ,12:52:50pm

விதி எண் 110 என்றால் என்ன:  முதலமைச்சரோ அல்லது எந்த அமைச்சர் வேண்டுமானாலும் விதி எண் 110 இன் கீழ் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும்.  விதி எண் 110ன் கீழ் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். குறிப்பாக, அவசரம் செயல் படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  இதே விதி எண் 110ன் கீழ் 151 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இது கின்னஸ் சாதனை என்று அப்போதைய சபாநாயகர் தனபால் தெரிவித்திருந்தார். 

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது என்னவென்றால்,  சென்னையில் கூவம் நதி சீரமைப்பதற்காக கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும்,  2371 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். 

 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் 6.51 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்,  மற்றும் 31 மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பாண்டில் 7.5 கோடி ரூபாய் செலவில் மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும்.

வீடியோ செய்திகள்