jeevan-works-logo
booked.net
வந்துருச்சுய்யா… வந்துடுச்சு தண்ணி… ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வருது தண்ணி..!!!

Published: Thursday, Jul 11,2019 ,01:06:18pm

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.  எங்கு பார்த்தாலும் மக்கள் குடத்துடன் தண்ணீருக்கு அலைமோதுவதை காண முடிகிறது. நிலத்தடியில் சுத்தமாக தண்ணீர் இல்லை.  வந்த வெள்ளம் எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. 

 இந்நிலையில் சென்னையில் இந்த குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.  இந்த பணிக்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

இந்த பணியின் ஒரு பகுதியாக மேட்டுச்சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம் பேட்டை ரயில் நிலையம் வரை குழாய்கள் பதிக்கும் பணி துரிதமாக நடைபெற்றது. இப்பணிகள் நேற்று முடிவுற்ற நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  பார்சம் பேட்டை கூட்ரோட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சோதனை ஓட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பழுது பார்க்கும் பணி நிறைவு நிறைவு பெற்ற பின் அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தனர். 

 இறுதியாக பார்சம்பேட்டை ரயில் நிலையத்தை தண்ணீர் வந்தடைந்ததும் விடிய விடிய ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் ஏற்றிய ரயில் சென்னைக்கு புறப்படும் என்று தெரிகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வரும் நீரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் சென்னை வில்லிவாக்கம் ஐ சி எஃப் ரயில்வே பணிமனையில் நடைபெற்று வருகிறது.  இதற்காக புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகிறது. 

வீடியோ செய்திகள்