jeevan-works-logo
booked.net
அயோத்தி பிரச்சினையை அயோத்தி மத்தியஸ்த குழு தீர்க்க தவறினால் இவ்வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

Published: Thursday, Jul 11,2019 ,01:52:12pm

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப் பகுதியை,  சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள்  சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடுகள் காரணமாக இந்த விவகாரத்திற்கு மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வேண்டும் என்று  நீதிமன்ற அறிவுறுத்தியது. 

 இதற்காக  நீதிமன்றம், முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது.  வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில்  உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். 

 இந்த மத்தியஸ்தர் குழு உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அவர் பல்கலைக்கழக வளாகத்தில் தமது பணியை தொடங்கியது. 

மத்தியஸ்த குழுவைச் சேர்ந்த மூவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என இப்ராகிம் கலிபுல்லா தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர்.  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அயோத்தி வழக்கில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நீண்ட காலமாகவே அதிகாரபூர்வமற்ற வகையில் மத்தியஸ்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  ஸ்ரீராம் பஞ்சவர்கள் சென்னையை சேர்ந்தவர். பல ஆண்டுகளாக மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் உச்சநீதிமன்றத்திற்கு இவர் உதவி வருகிறார். மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக இரண்டு புத்தகங்களை அவர் இதுவரை எழுதியுள்ளார். 

இந்நிலையில்,  மத்தியஸ்த குழுவால் அயோத்தி வழக்கில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இவ்வழக்கை நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இவ்வழக்கின் வாதிகளில் ஒருவரான  கோபால் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,  அயோத்தி பிரச்சனைக்கு மத்தியஸ்த குழுவால் தீர்வு காண முடியாது என்ற சூழ்நிலை வரும் பொழுது,  ஜூலை 25 முதல் உச்ச நீதிமன்றமே நாள்தோறும் அந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவித்தது. உச்சநீதிமன்றம் இந்த விசாரணையை தொடங்குவது குறித்த அறிவிப்பு வரும் 18ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

வீடியோ செய்திகள்