jeevan-works-logo
booked.net
கடவுளின் துகள் எனப்படும் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேனி மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் இப்போது நியூட்ரினோ.

Published: Friday, Jul 12,2019 ,10:56:37am

தேனி மாவட்டம்,  பொட்டிபுரம் கிராமத்தில் இருக்கும் அம்பரப்பர் மலையில் கடவுளின் துகள் என அழைக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து  ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.  இத்திட்டத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. 

 இந்நிலையில் மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,  இந்தியாவிலேயே முதன்முறையாக தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும்,  இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும்,  கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது என்றும் அவர் விளக்கமளித்தார். 

இந்த நியூட்ரினோ ஆய்வு மூலம்,  பூமியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

 அணுமின் நிலையங்களின் கழிவுகளை  அழிக்க வழி தெரியாத இந்த அரசு, கடலில் கொட்டி எண்ணெயை    வாளியில் அள்ளிக் கொண்டு இருந்த இந்த அரசு, இப்பொழுது சொல்கிறது நியூட்ரினோ ஆய்வின் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்று. 

 ரேடியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில்,  அதன் இருளில் ஒளிரும் தன்மையை மட்டும் கருத்தில் கொண்ட ஆராய்ச்சியாளர்கள்,  அவற்றை கைக்கடிகாரங்களில் உபயோகிக்க யோசனை வழங்கினார். ஆகவே உற்பத்தியாளர்கள் கைக்கடிகாரங்களின் டயல்களில் ரேடியத்தை  பூசத் தொடங்கினார். அந்த தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள், ஒரு தூரிகையில் ரேடியத்தை தொட்டு அந்த டயல்களில் தீட்டுவார்கள்.  மீண்டும் அந்த தூரிகையை தங்கள் வாயில் வைத்து, தங்கள் எச்சிலால் அந்தத் தூரிகையை கூர் செய்வார்கள்.

நாளடைவில் அந்த பெண்களுக்கு பல் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்து,  பின்னர் பற்கள் உதிர ஆரம்பித்தது. பின்னர் புற்றுநோய் ஏற்பட்டு ஒவ்வொருவராக மடிய தொடங்கினார். இவ்வளவும் ஏற்பட்ட பிறகுதான், உலகத்திற்கு தெரிய வந்தது, ரேடியம் என்பது வெறும் ஒளிரும் தனிமம் மட்டுமல்ல -  அது கதிர்வீச்சு தன்மை உடையது என்று. 

 வியாபாரிகளுக்கு மக்களது உயிரைப் பற்றி கவலை இருக்காது.  சில உயிர்கள் போன பிறகு கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்கள் வேறு தொழில்களை வடிவமைத்துக் கொள்வார்கள்.  இந்த கேடுகெட்ட அரசாங்கங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ள கடமைப்பட்டவை அல்லவா...

வீடியோ செய்திகள்