ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து சந்திராயன் 2 விண்கலம் இன்று ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கிய 20 மணி நேர கவுண்டவுன், இன்று அதிகாலை 2 .51 க்கு முடிந்து விண்கலம் ஏவப்பட்ட இருக்க வேண்டும்.
சந்திராயன்-2 மின்கலத்தை ஏவ ஜிஎஸ்எல்வி மார்க் 3 வகை ராக்கெட் பயன்படுத்தப்பட இருந்தது. இவ்வகை ராக்கெட்டுகளில் திட மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றைக் கொண்ட திரவ எரிபொருள் விண்கலம் ஏவப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நிரப்பப்படும்.
சந்திராயன்-2 ராக்கெட்டுக்கு திரவ எரிபொருள் நிரப்பும் பணி நள்ளிரவு ஒரு மணியளவில் முடிவடைந்த நிலையில், அடுத்த ஐந்து நிமிடத்தில் விண்கலம் ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஹீலியம் எரிபொருளில் ஏற்பட்ட கசிவு தான் இதற்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை இந்த கசிவை சரி செய்யாமல் விண்கலத்தை இருந்தால், நடுவழியில் விண்கலம் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கசிவை சரி செய்ய கடைசி நேரத்தில் கடுமையான முயற்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. சரி செய்யப்பட முடியாத நிலையில்தான் விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பொழுது நிரப்பப்பட்ட எரிபொருள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு கசிவிற்கான காரணம் கண்டறியப்பட்டு சரி செய்த பிறகு 3 வாரம் முதல் 6 மாதத்திற்குள் விண்கலம் மாறுபடியும் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு தற்காலிக பிரச்சனை தானே தவிர நிச்சயமாக, தோல்வி இல்லை. இப்பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிந்து மிகப்பெரிய இழப்பை தடுத்த விஞ்ஞானிகள் பாராட்டுக்குரியவர்கள்.
நிச்சயமாக இந்த சந்திராயன் 2ம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும். இதன்பிறகு 2021ல் ஆதித்யா L1 எனப்படும் சூரியனை ஆராய்வதற்கான விண்கலமும், 2022-ல் வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் 2 என்ற விண்கலமும், 2023 இல் வெள்ளி கிரகத்தை ஆராய சுக்ராயன்-1 போன்ற திட்டங்கள் நமது ஐஎஸ்ஆர்ஓ இடம் இருக்கிறது.