jeevan-works-logo
booked.net
ஜோதிடத்தால் அல்ல பெண் பித்தால் நிகழ்ந்த மரணம் சரவணபவன் ராஜகோபால்.

Published: Thursday, Jul 18,2019 ,01:14:34pm

கடந்த சில வருடங்களாக  நடந்து வந்த சரவணபவன் ராஜகோபால் மீதான கொலை வழக்கு சில நாட்களுக்கு முன்பு தான் அவரை சிறையில் அடைக்கும் வரை வந்தது.  உடல் நிலையை காரணம் காட்டி சரணடைவதை தள்ளிப் போட்டு வந்தார் சரவணபவன் அண்ணாச்சி. இப்போது நிரந்தரமாக மரணத்தின் மடியில் சரணடைந்திருக்கிறார் அவர்.

 உடனே அனைத்து ஊடகங்களும்  ஜோதிடத்தால் அழிந்தார் ஜோதிடத்தால் அழிந்தார்  என்று அலறி வருகின்றன. அது வெறும் பாதி உண்மை தான்.  ஜோதிடத்தை காரணம் காட்டி தன் பெண்பித்துக்கு வழி தேடியதால் மட்டுமே இப்படி ஒரு அழிவு நிகழ்ந்தது என்பதே உண்மை. 

 உண்மையான ஜோதிடம் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் வலியைக் கொடுக்கும்.  உண்மையை உரக்கச் சொல்லும். அவன் மனதில் இருக்கும் வக்கிரங்களை வெளிக்கொண்டுவரும்.  அவன் யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்காத திட்டங்களைக் கூட கண்டுபிடித்துவிடும். அதற்கான காரணமும் விளைவுகளும் என்ன என்பதை அந்த ஜாதகருக்கு உண்மையான ஜோதிடம் விளக்கிச் சொல்லும். 

 ஆனால் பணத்தாசை பிடித்த  ஜோதிடர்களுக்கு, பலன் பார்க்க வருபவர்களுக்கு எப்படி சொன்னால் பிடிக்கும் என்பது சில நொடிகளிலேயே புரிந்துவிடும்.  அவர்கள் லேசாக நூல் விட்டு பார்ப்பார்கள், வந்திருப்பவர் எதில் பலவீனமாக இருக்கிறார் என்று. அதுபோன்ற ஜோதிட கிருமிகளால்  கூறப்படுவதே இதுபோன்ற பரிகாரங்கள் - நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும், 16 வயது பெண்ணை மணக்க வேண்டும், ஒரே நேரத்தில் இரண்டு பேரை கூட வேண்டும்…  இப்படி. 

 ஏற்கனவே மனதில்   வக்கிரம் குடி கொண்ட மனிதருக்கு,   ஜோதிடரே இப்படி சொன்னதும், மனதில்  கொஞ்சம் கொஞ்சம் இருந்த தடைகளும் முற்றிலுமாக நீங்கிவிடும். அவர்கள் அந்த பரிகாரத்தை செயல்படுத்தும் முயற்சியில் முழுவதுமாக இறங்கி விடுவார்கள்.

  இது போன்ற அற்புதமான பரிகாரங்களை சொல்லும் ஜோதிடருக்கும் அதன்பிறகு ராஜ யோகம் தான்.  இதே பள்ளிக்கூடம் கட்டு, மரம் நடு என்று பரிகாரம் சொன்னாள் உங்கள் ஜோதிட பொழப்பு ஓடாது.

நேற்று முன் தினம் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ராஜகோபால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இன்று அவர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 72. 

 உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது  சரவணபவன் சாம்ராஜ்யம். அதன் உரிமையாளர் இப்படிப்பட்ட ஒரு முடிவை எட்டியிருப்பது  நம் அனைவருக்குமான பாடமாகவே பார்க்கவேண்டும்.  

 உங்கள் மன வக்கிரங்களை வெளிக்கொண்டுவர ஜோதிடத்தையோ,   ஆன்மீகத்தையோ பயன்படுத்தினால் இதுவே கதி.

வீடியோ செய்திகள்