jeevan-works-logo
booked.net
விடிய விடிய மழையில் நனைந்த சென்னை.

Published: Thursday, Jul 25,2019 ,11:02:45am

சென்னை ,திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி  உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.  சென்னையில் நேற்று இரவு மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம்  ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை மழை பெய்தது. 

 திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம்,  கீழ்பெண்ணாத்தூர், வேங்கிக்கால், வந்தவாசி  ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை,  கொட்டப்பட்ட, வண்டியூர் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. 

 ஊட்டியில் சில மணி நேரங்களுக்கு மேலாக பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. 

 தமிழகத்தில்  நாளை பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  தமிழகத்தின் தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை ,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களும்  காஞ்சிபுரம் திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் மழை பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் ஏழு செண்டி மீட்டர் மழையும்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 சென்டி மீட்டரும், செம்பரம்பாக்கம் 3 சென்டி மீட்டரும், பூந்தமல்லியில் 3 சென்டி மீட்டரும்,  நுங்கம்பாக்கத்தில் இரண்டு சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

 தண்ணீருக்காக குடத்தை தூக்கிக்கொண்டு திரிந்த சென்னை மக்கள்  இனிமேலாவது மழைநீர் சேமிப்பு குறித்து செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.

வீடியோ செய்திகள்