jeevan-works-logo
booked.net
நங்கநல்லூரில் நிலத்தடி நீர் சட்டவிரோத விற்பனை எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள்.

Published: Thursday, Jul 25,2019 ,11:21:49am

 நங்கநல்லூரில் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதாக இளையராஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இப் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி ஏற்படுவதற்கான எழுத்துப்பூர்வ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 

 இந்த சட்டவிரோத கும்பலுக்கு ஆதரவாக பழவந்தாங்கல் ஆய்வாளர் நடராஜன் இருப்பதாகவும்,  இந்த சட்டவிரோத நடவடிக்கையை தட்டி கேட்ட பொதுமக்கள் மிரட்டப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்த புகார்கள் காவல்நிலையத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். 

 காவல் ஆணையர் அழைத்திருந்த இந்த அறிக்கையால் கோபமடைந்த நீதிபதிகள்,  சட்டவிரோத கும்பலுக்கு ஆதரவாக இருந்த ஆய்வாளர் நடராஜன் மீது அதிருப்தி தெரிவித்தனர்.  வருவாய் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இத்தனை புகார்களுக்கு பிறகும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை  சிபிஐ போன்ற உயர்மட்ட விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 அரசுத் தரப்பில் காவல் ஆணையர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால், வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல்துறை ஆய்வாளரை இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.   சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதே இப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பொது மக்கள் கருத்து. 

வீடியோ செய்திகள்