jeevan-works-logo
booked.net
நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை வழக்கு. நேரில் ஆஜராக உத்தரவு.

Published: Thursday, Jul 25,2019 ,11:29:31am

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சென்னை வடபழனியில் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியருக்கு வழங்கிய ஊதியத்தில் வரி பிடித்தம் செய்துள்ளது.  அவ்வாறு பிடித்தம் செய்த தொகையை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வருமான வரித்துறையில் அளித்த நோட்டீஸுக்கு விஷால் தரப்பில் இருந்து எந்த வித பதிலும் அளிக்கவில்லையாம்.  இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம்,  ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு  சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

நீங்கள் திரையில் நியாயத்தை நிலை நாட்டி,  அரசியலில் குதித்து நாட்டுக்கு நல்லது செய்து  சரித்திரம் படைக்கும் முன் உங்களிடம் சம்பளம் பெறும் ஊழியர்களிடம் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். மற்ற அனைத்து ஆணிகளையும் பிறகு பிடுங்கிக் கொள்ளலாம்.

வீடியோ செய்திகள்