jeevan-works-logo
booked.net
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார் ஹுன்டாய் கோனோ….!!!

Published: Thursday, Jul 25,2019 ,11:42:07am

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மின்சார உற்பத்திக்காக தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்திருந்தது.  அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் கோனோ என்ற பெயருள்ள மின்சார காரின் உற்பத்தியை தொடங்கியது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகும் முதல் மின்சார கார் ஆகும்.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இந்த காரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அந்த காரில் பயணம் செய்தார். 

 ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் வரை இந்த கார் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்பது வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும். அதிகபட்சமாக 152 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது இந்த கார். 

 வசதிக்காக வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்று ஹுண்டாய் நிறுவனம் கூறியுள்ளது.  அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஒரு பகுதியின் பெயர் கோனோ என்றும், சாகச பிரியர்களான அப்பகுதி மக்களை கவுரவிக்கும் விதமாக இந்த காருக்கு கோனோ என்று பெயரிடப்பட்டதாகவும் ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு முடிவு கட்டவும்,  பெருகி வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணவும்,  இத்தகைய வர்த்தக ரீதியிலான மின்சார வாகனங்கள் உதவக்கூடும். நெடுஞ்சாலைகளில் தொலை தூரங்கள் செல்வதற்கு வசதியாக மின் ஏற்ற வசதிகள் அரசாங்கத்தின் மூலமாக செய்து தரப்படும்போது,  இதுபோன்ற மின்சார வாகனங்கள் வெகுஜன பயன்பாட்டிற்கு வரக்கூடும்.

வீடியோ செய்திகள்