jeevan-works-logo
booked.net
நெல்லை மாநகராட்சி முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு அதிர்ச்சி திருப்பம்.

Published: Thursday, Jul 25,2019 ,12:38:24pm


நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி அரசு பொறியியல் கல்லூரி அருகே இருக்கும் டீச்சர்ஸ் காலனி என்ற குடியிருப்பு  பகுதியில் உள்ள தனி வீட்டில் வசித்து வந்தார். 

1996 முதல் 2001  ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் திமுகவை சேர்ந்தவர்.  இவரது கணவர் முருகேசன் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த செவ்வாய் (23/07/2019)  அன்று உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வேலைக்கார பெண் மாரி ஆகியோர் கொலையுண்டு கிடந்திருக்கின்றனர். 

வழக்கமாக மதியம் 2 மணிக்கு வீடு திரும்பிவிடுவார் உமா மகேஸ்வரி.  பணிப்பெண் மாரி அதன் பிறகு தன் வீட்டிற்குச் சென்று விடுவார். நான்கு மணி வரையிலும் மாரி  வீடு திரும்பாததால் அவரது தாயார் வசந்தா உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்து பார்த்து இருக்கிறார்.  பேரப்பிள்ளைகளை வழக்கமாக பள்ளியில் இருந்து அழைத்து வரும் முருகசங்கரனும் அவ்வாறு செய்யாததால் உமா மகேஸ்வரியின் மருமகனும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.  அங்கு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன்,  துணை ஆணையர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உமா மகேஸ்வரி மற்றும் முருகசங்கரன் ஆகியோர் அணிந்திருந்த  நகைகள் திருடு போயிருந்தது. வீட்டிலிருந்த வேறு எந்த பொருட்களும் திருடுபோகாதது சந்தேகத்தை உண்டாக்கியது.  நகைகளை திருடி சென்றது போலீசாரை திசை திருப்பும் ஒரு முயற்சி என்று முடிவுக்கு வரச்செய்தது. 

உமா மகேஸ்வரி பினாமி பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி வைத்திருந்ததாகவும்,  சொத்துக்களை தனது இரு மகள்களின் பெயர்களில் மாற்ற முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில் கொலை நடைபெற்று  இருப்பதால், இது சொத்துக்காக அவர்களது பினாமிகள் நடத்திய கொலை என்று சந்தேகம் வலுத்து வருகிறது. எனவே சொத்து தொடர்பாக உமா மகேஸ்வரி உடன் சச்சரவுகளில் ஈடுபட்டது யார் என்று விசாரணை தொடங்கியுள்ளது. 

 இந்த பிரச்சினைகள் எதற்குமே சம்பந்தமில்லாத பணிப்பெண் தனது பிள்ளைகளை தவிக்கவிட்டு கொலையுண்டது,  கண்டுகொள்ளப்படாத ஒரு சோகக் கதை.

வீடியோ செய்திகள்