jeevan-works-logo
booked.net
அத்தனை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் மசோதா நிறைவேற்றம்..

Published: Friday, Jul 26,2019 ,10:17:04am

 இஸ்லாம் மதத்தில் கணவர்கள் தங்கள் மனைவிகளை மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தடை செய்யும் வகையில் முத்தலாக் தடை சட்ட மசோதா பிஜேபியின் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.  இச்சட்டத்தின்படி முத்தலாக் முறைப்படி விவாகரத்து அளித்தால் கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும். 

 இந்த முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.  ஆகவே ஆளும் பிஜேபி அரசு இச் சட்டத்தில் உள்ள சில மசோதாக்களை நீக்கியது. குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற பகுதி நீக்கப்பட்டது. பழைய ஆட்சியில் பிஜேபி அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது.  ஆகவே அரசு முத்தலாக் அவசர சட்டம் பிறப்பித்தது. பதவிக்காலம் முடிவடையவும் முத்தலாக் தடை சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. 

 புதிய அரசு பொறுப்பேற்று,  மக்களவையின் முதல் கூட்டத்தொடரில்  முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.  இம்முறை மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது. காங்கிரஸ்,  திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்த போதிலும்,  முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. 

 அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் ரவிக்குமார்,  முத்தலாக் தடை மசோதா பெண்களுக்கான வலிமையை அதிகரிக்கும் என்று கூறினார்.  இந்த மசோதா பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத்தர வழிவகுக்கும் என்று அவர் கூறியிருந்தார். 

வீடியோ செய்திகள்