jeevan-works-logo
booked.net
குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு.... வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு.

Published: Saturday, Jul 27,2019 ,09:18:36am

 குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தடயவியல் ஆய்வகம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இவ்வழக்கில், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ள மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு  இந்த வழக்கை விசாரித்தது. விசாரணைக்கான தடயவியல் அறிக்கை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றதா என்பதை  மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தீர விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு,  60 நாட்களுக்குள், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ள மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

 பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும்  இது போன்ற வழக்குகளை கையாளும் திறன் உள்ள  உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தடயவியல் அறிக்கைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வீடியோ செய்திகள்