jeevan-works-logo
booked.net
முத்தலாக் மசோதா மீது அதிமுக திமுக மக்களவையில் கடும் வாக்குவாதம்.

Published: Friday, Jul 26,2019 ,10:40:19am

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.  மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,  அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 

 மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில்  அதிமுக உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத்  பேசும்போது, இம்மசோதா பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் என்றும்,  பாலின ரீதியிலும் சமூக ரீதியிலும் இருக்கும் பாகுபாடுகளை கலையும் விதமாக இம்மசோதா அமையும் என்றும் கூறினார். 

இதே முத்தலாக் மசோதா கடந்த பாஜக ஆட்சியின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது,  அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்.  ஆனால் தற்போது ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். 

 இந்த  மசோதா மீது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி,  பெண்கள் உரிமையை பாதுகாக்க முத்தலாக் மசோதாவை கொண்டு வந்ததாக கூறும் இந்த மத்திய அரசு,  முதலில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றட்டும் என்று கூறினார். முதலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்துவிட்டு பின்னர் முத்தலாக் பற்றி பேசுங்கள் என்று அவர் மேலும் கூறினார்.

வீடியோ செய்திகள்