23 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் வைகோ, எம்பியாக தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றார். கேள்வி நேரத்தின்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இடம் வைகோ கேள்விகளை கேட்டார்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சபையில் துணைக் கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தார்.
“ பருத்தி விலை, பஞ்சு விலை திடீர் திடீரென மாறுவது நூற்பாலைகளுக்கு நெருக்கடியை தருகிறது. மூடப்பட்ட நூற்பாலைகள் எத்தனை லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி பதில் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் நூற்பாலைகள் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றுகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இவ்விதிகளை சமமாக பின்பற்றச் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதில் கூற மறுத்துவிட்டார்.
“ சீனாவிலிருந்து ரெடிமேட் ஆடைகள் குறைந்த விலைக்கு வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகின்றன. பிறகு அவை வங்கதேசத்திலிருந்து, அந்நாட்டு முத்திரையுடன் இந்தியாவுக்கு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நமது நாட்டு நூற்பாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதை தடுக்க மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்கும் என வைகோ மேலும் கேள்வி எழுப்பினார்.
இக் கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி ராணி, வைகோ கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை என்றார். இதற்கு வைகோ, உங்கள் பதிலில் எனக்கு திருப்தி இல்லை உடனடியாக கூறிவிட்டார்.
23 ஆண்டுகளாக அடைபட்டிருந்த வைகோ மக்களவையில் சிங்கமென கர்ஜித்து இருப்பது பாராட்டுக்குரியது.