jeevan-works-logo
booked.net
தந்தையின் இறப்புக்கு வந்தது... இப்பொழுதுதான் மகளின் திருமணத்திற்காக வருகிறார் நளினி. இந்த கொடுமைக்கு முடிவில்லையா..?

Published: Friday, Jul 26,2019 ,11:13:02am

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி தன் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக  ஒரு மாதம் பரோலில் வெளி வந்துள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி,  வேலூர் பெண்கள் சிறையில் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  இதற்கு முன், தனது தந்தை மரணத்தின்போது 12 மணி நேர பரோலில் நளினி வெளிவந்து இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் ஒரு மாத பரோலில் வெளி வந்து இருக்கிறார். 

 பரோலில் வெளி வந்திருக்கும் நளினி,  வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்க இருப்பதாக ஜாமினில் குறிப்பிட்டுள்ளார்.  வீட்டிற்கு வந்த மகளை நளினியின் தாயார் பத்மா கண்ணீர் மல்க ஆரத்தி எடுத்து வரவேற்றார். 

 லண்டனில் வசித்து வரும் நளினி மகள் அரித்ரா விற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.  தற்போது லண்டனில் இருக்கும் ஹரித்ரா விரைவில் வேலூர் வருகிறார். 

வீடியோ செய்திகள்