jeevan-works-logo
booked.net
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை… மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியது.

Published: Saturday, Jul 27,2019 ,08:46:02am

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 47 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.   வினாடிக்கு 1011 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

 கபினி அணைக்கு 10 ஆயிரத்து 656 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

 கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால்,  காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் பாய்கிறது. இதனால், பரிசல் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நான்காவது நாளாக நீடிக்கிறது. 

 மேட்டூர் அணைக்கு, 7200  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  நேற்று 41.15 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 42.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து  வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. செட்டிபட்டி, கோட்டையூர், அரசு துறைகளில் பரிசல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் செய்தி கேட்டு டெல்டா பகுதி விவசாயிகள் மட்டுமல்ல,  அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோ செய்திகள்