jeevan-works-logo
booked.net
இந்திய மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. தலைமன்னார் கடற்படை முகாமில் சிறையிலடைப்பு.

Published: Monday, Jul 29,2019 ,09:13:26am

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்  ஏழு பேர் நெடுந்தீவு பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த  படகு திசைமாறி சென்று உள்ளது. அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, படகையும் கைப்பற்றி  தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். 

 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  2019 ஜனவரி மாதம், இதே படகு இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

 சிறிய நாடான இலங்கை கடற்பகுதி பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக  இருக்கிறது என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் ரோந்து படகு  அப்பகுதியில் உலவி வந்தது என்றால், இந்திய வல்லரசின் ரோந்து படகுகள் என்ன செய்து கொண்டிருந்தன என்று கேள்வி எழும்புகிறது. 

நடுக்கடலில் இயந்திர கோளாறு வருவதோ,   கடல் கொந்தளிப்பால் படகு திசை மாறிச் செல்வதோ  மீன்பிடித் தொழிலில் சாதாரணமாக நடைபெறுவதுதான். எந்த நாட்டு மீனவருக்கும் இது நடக்கலாம்.  இதுபோன்ற கைது சம்பவங்கள் எண்ணற்ற முறைகள் நடந்த பின்னும் இந்திய வல்லரசு இதுகுறித்து என்ன செய்திருக்கிறது என்று அறிந்துகொள்ள பொதுமக்கள்  தாளாத ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

வீடியோ செய்திகள்