jeevan-works-logo
booked.net
மறைந்தார் சுஷ்மா சுவராஜ்... 67 வயதில் மாரடைப்பில் காலமானார்.

Published: Wednesday, Aug 07,2019 ,07:48:48am

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.  1852 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்பொழுது 67 வயதாகிறது. 

 உடல் நிலையை காரணம் காட்டி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுஷ்மாசுவராஜ் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற போதும்,  அமைச்சரவையில் இடம் வேண்டாம் என சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்திருந்தார். 

இந்திரா காந்திக்கு பிறகு,  இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த பெண் சுஷ்மா சுவராஜ் மட்டுமே.  அவரது கடைசி டுவிட்டர் பதிவில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தார். 

சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தியை கேள்வியுற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். 

 பிரதமர் நரேந்திர மோடி,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பாஜக செயல் தலைவர் ஜி பி நட்டா ஆகியோர்  தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர். 

 பொதுமக்களின் அஞ்சலிக்காக சுஷ்மா சுவராஜுடன் அவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  மதியம் 12 மணிக்கு பாஜக அலுவலகம் எடுத்துவரப்படும் அவரது உடல், மாலை 3 மணி அளவில் டெல்லி லோதி சாலையில் உள்ள தகன மையத்தில்,  முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும். 

 மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவர்,  டெல்லியின் முன்னாள் முதல்வர், தனது கருத்துக்களை வலுவாக முன்வைத்து துணிச்சலாக பேசக்கூடிய ஒரு அரசியல்வாதி -  சுஷ்மா ஸ்வராஜது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

வீடியோ செய்திகள்