முறையற்ற காதலுக்கு தடையாக இருந்த பெண்ணின் தாயை கொலை செய்து, கொலையை மறைக்க மேலும் 9 கொலைகள் செய்த இளைஞர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சனல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில் வரிசையாக 9 பிணங்கள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேட்டி அளித்த காவல் ஆணையர் ரவீந்தர், 7 தனிப்படைகள் அமைத்து 72 மணி நேரத்தில் துப்பு துலக்கியதாக தெரிவித்தார். அதுகுறித்த அதிர்ச்சித் தகவல்கள் பின்வருமாறு…
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத் அவரது மனைவி நிஷா ஆகிய இருவரும் வாரங்கலில் உள்ள சாக்கு பை தொழிற்சாலையில் கடந்த இருபது வருடங்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நிஷாவுக்கு பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நிஷாவின் உறவினர் ரபிகா தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வாரங்கலுக்கு வந்து சேர்ந்தார். வந்த இடத்தில் சஞ்சய் குமாருக்கு சாப்பாடு தயாரித்துக் கொடுத்து பணம் பெற்று வந்திருக்கிறார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ரபிகாவின் பதினாறு வயது மகளுடன் சஞ்சய் குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ரபிகா தன்னை திருமணம் செய்வதாக கூறி இப்பொழுது தன் பெண்ணை அபகரிக்க நினைப்பதாக கூறி சஞ்சய்குமார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சஞ்சய் குமார் ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
திட்டமிட்டபடி கடந்த மார்ச் 7ம்தேதி ரபிகாவை மேற்கு வங்கத்திற்கு ரயிலில் அழைத்துச் சென்றிருக்கிறார், சஞ்சய் யாதவ். இரவு மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அதிகாலை 3 மணி அளவில் நல்ல உறக்கத்தில் இருந்த ரபிகாவை, ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த பொழுது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து ரயிலில் இருந்து தூக்கி வீசி இருக்கிறார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்பவும் வாரங்கலுக்கு வந்து இருக்கிறார்.
திரும்பிவந்த சந்த யாதவிடம் ரபிகா எங்கே என்று நிஷா கேட்க, அதற்கு அவர் பீகாரில் இருக்கும் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் எந்தவித அலைபேசி தொடர்பும் ரபிகாவுடன் இல்லாமல் இருந்ததால் நிஷா சஞ்சை யாதவின் பேச்சை நம்பவில்லை. உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் செய்வதாக நிஷா மிரட்டியுள்ளார். ஆதலால், ரபிகாவை அழைத்துச்சென்ற விஷயம் தெரிந்த மசூத் நிஷா குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரையும் மொத்தமாக கொள்ள சஞ்சய் யாதவ் முடிவு செய்துள்ளார்.
அதன்படி மசூத் நிஷாவின் மூத்த மகனுக்கு கடந்த 21ஆம் தேதி பிறந்தநாள் பார்ட்டி நடத்தப்படுவதை அறிந்து சஞ்சய் குமார் அதில் கலந்து கொண்டார். ஏராளமான தூக்க மாத்திரைகளை கையோடு எடுத்துச் சென்றிருந்த செந்தில்குமார், குளிர்பானத்தில் அவற்றை கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களும் இந்த தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை குடித்து உள்ளனர்.
இரவு 12 மணிக்கு ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த 9 பேரையும், தனித்தனியாக சாக்கு பையில் வைத்து கட்டி அருகில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளான். விசாரணையில் இதைக் கண்டறிந்த காவல்துறையினர், ரபிகா கொலை செய்யப்பட்டதும் உறுதியான நிலையில், தாடைப்பள்ளி காவல்துறையினர் சஞ்சய் யாதவ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 9 பேர் கொலையில் சிசிடிவி ஆதாரங்கள் வலுவானவையாக இருந்துள்ளன.
தனது முறையற்ற காதலுக்கு பலியாக 10 உயிர்களை காவு வாங்கியுள்ளார் சஞ்சய் யாதவ்.