சென்னையில் நேற்று மட்டும் 549 பேருக்கு கொரோனா!! மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,131 ஆக உயர்வு!!!
உலகம் முழுவதும் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் பல நாடுகளில் அதன் பிடியிலிருந்து ஓரளவு விடுதலை ஆகியுள்ளன. ஆயினும், தொடக்கத்தில் மிகக்குறைவாக பாதிக்கப்பட்டு வந்த தமிழகம் மற்றும் சென்னை பகுதிகள் இப்பொழுது மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று மட்டும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தார் எண்ணிக்கை 5,135 மற்றும் சிகிச்சையில் இருப்போரும் 5,911 ஆகும். சென்னையில் மட்டும் உயிரிழப்பு 84 ஆகும்.
செங்கல்பட்டில் நேற்று மட்டும் 54 பேருக்கும், திருவள்ளூரில் 37 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் மொத்தம் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் வேகம் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. பலரும் சென்னையை விட்டு வெளியேறும் திட்டத்தில் உள்ளனர். இ பாஸ் வழங்கும் நடைமுறைகள் மரணம், திருமணம், மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முறையான பரிசோதனைகள் மற்றும் தனிமை படுத்தும் நடவடிக்கைகளுடன் சென்னையிலிருந்து வெளியேறுபவர்களை அனுமதிப்பதே நல்லது.