jeevan-works-logo
booked.net
மரண தோஷம் என்றால் என்ன?

Published: Saturday, Jun 13,2020 ,08:15:43am

குடும்பத்தினர் யாரேனும் இயற்கை எய்திய நிலையில் அந்த வீட்டில் மரண தோஷம் ஏற்படுகிறது. இந்த தோசத்திற்கு உரிய கால அளவுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

வடமொழியில் தனிஷ்டா பஞ்சமி என்றொரு சொல்வழக்கு உள்ளது. தனிஷ்டா என்றால் அவிட்ட நட்சத்திரத்தை குறிப்பது, பஞ்சமி என்பது ஐந்து என்ற இலக்கத்தை குறிப்பது.

எனவே அவிட்டத்திலிருந்து ஐந்து நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த நட்சத்திரங்களில் அந்த மரணம் நடந்திருந்தால் ஆறு மாதங்கள் வரை தோஷம் உண்டு. ஆறு மாதம் வரை தோஷம் இருப்பதால்  உள்ளே விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் முழுவதுமாக 24 மணி நேரமும் வீட்டை மூடி வைத்திருக்க வேண்டும்.  மேலும் ரோகிணி நட்சத்திரத்தில் நிகழ்ந்திருந்தால் நான்கு மாதங்களும், கிருத்திகை உத்திரம் நட்சத்திரத்தில் நிகழ்ந்திருந்தால் மூன்று மாதங்களும், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களில் நிகழ்ந்திருந்தால் இரண்டு மாதங்களும் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருக்க வேண்டும்.  இது இந்த காலங்களில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

எனவே தற்போதுள்ள வீடுகளில் கப்போர்டுகள் இருக்கின்றது. அதனை காலி செய்துவிட்டு உள்ளே விளக்கை ஏற்றி வைத்து காலை ஏதோ ஒரு நேரத்திற்கு விளக்கை ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஆரத்தி காட்டிவிட்டு இந்தக் கதவை மூடி வைத்துவிட வேண்டும்.  இந்த நட்சத்திரம் குறிப்பிட்டபடி அத்தனை மாதங்களுக்கு மூடி வைத்திருந்தால் இந்த மரண தோஷம் விலகிவிடும்.

ஏற்றப்படும் விளக்கானது வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும். இந்த அணையா விளக்கிற்கு மாலையும் ஒருமுறை ஆரத்தி எடுப்பது நல்லது. மற்ற நட்சத்திரங்களில் இயற்கை எய்தி இருந்தால் வழக்கமாக  நாம் செய்யும் 30 நாட்கள் விளக்கு ஏற்றி தீபாராதனை செய்வதே போதுமானது. நன்றி 

குருவருள் ஜோதிடர் சுபம் தமிழ்மணி
9884000815

வீடியோ செய்திகள்