jeevan-works-logo
booked.net
ஆஸ்கருக்கே ஆப்பு வைத்த கொரோனா… விருது வழங்கும் விழா தள்ளிவைப்பு..!!

Published: Tuesday, Jun 16,2020 ,12:30:07pm

கொரோனா அச்சுருத்தல் காரணமாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 உலக அளவில் திரைப்படத் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுருத்தல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் அதிக அளவு திரைப்படங்கள் தயாரிப்பு நிலைகளில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக 1938ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டபோதும், 1981 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் இறப்பின் போதும் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தேதி மாற்றி அமைக்கப்பட்டது.  தற்போது நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா தேதி மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவா கொக்கா!!

வீடியோ செய்திகள்