jeevan-works-logo
booked.net
மீன் வெட்டும் பலகையில் கொரோனா.. சீனாவில் இரண்டாவது அலைக்கான காரணம் தெரியவந்தது..!

Published: Tuesday, Jun 16,2020 ,12:50:52pm

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவு சந்தையில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் மீண்டும் அங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பீஜிங்கில் உள்ள ஸின்ஃபாடு என்ற மொத்த உணவு சந்தையில் 8 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்பவர்கள் 36 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சீன அரசு இரண்டு இலட்சம் பெயரை “வீட்டின் கதவைத் தட்டி” என்ற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.

 கடந்த 50 நாட்களாக பீஜிங் நகரில் புதிதாக தொற்று ஏதும் ஏற்படவில்லை. இப்பொழுது இந்த இரண்டாவது அலை தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோ செய்திகள்