jeevan-works-logo
booked.net
உலக அளவில் 5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. மற்ற உலக நாடுகளில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது..?

Published: Wednesday, Jun 17,2020 ,07:49:33am

கடுமையாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. வைரஸ் பரவலில் இரண்டாம் இடத்திலுள்ள பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது 1400 பேர் நேற்ற் ஒரே நாளில் உயிரிழந்தனர். ஒரே நாளில் தொற்றும், உயிரிழப்பும் அதிகமாக இருப்பதால் பிரேசில் அரசு மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும் ஒரே நாளில் 26 ஆயிரம் பேரை தொற்றி இருக்கும் கொரோனா வைரஸ் 850 உயிர்களை பறித்து சென்றுள்ளது. 

மெக்சிகோ, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஈரான் ஆகிய நாடுகளிலும் வைரஸ் தொற்றும் உயிரிழப்பும் மளமளவென அதிகரித்து வருகிறது. 210 மேற்பட்ட நாடுகளில் இதுவரை 82 லட்சத்து 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 6600 பேர் உயிரிழந்துள்ளதால் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது.

வீடியோ செய்திகள்