jeevan-works-logo
booked.net
35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் HSBC வங்கி. கொரோனா பொருளாதார மந்த நிலை காரணம்.

Published: Thursday, Jun 18,2020 ,08:26:15am

கொரோனாவால் வீழ்ந்திருக்கும் பொருளாதார மந்த நிலையின்  எதிரொலியாக 35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வங்கி HSBC அறிவித்துள்ளது.

 சர்வதேச அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் புதிய பணி அமர்த்தல் நிறுத்திவைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, சம்பள குறைப்பு, பணிநீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனது வணிகத்தை உள்ள செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் 35,000 பேரை பணி நீக்கம் செய்வதாக HSBC வங்கி அறிவித்துள்ளது.

 இது தொடர்பாக இந்நிறுவனத்திற்கு உலகம் முழுக்க உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுக்கு குறிப்பாணை (Memo) அனுப்பப்பட்டுள்ளது.  அதில் HSBC  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நோயல் குயின், இந்த பணி நீக்க நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளார். இழப்புகளை நிறுத்த முடியவில்லை எனவும் இது எப்போது முடியும் என்ற ஒரு கேள்விதான் தங்களிடமும் உள்ளது என்றும் கூறியுள்ளார்

வீடியோ செய்திகள்