jeevan-works-logo
booked.net
கொரோனாவுக்காக ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று சொன்ன பிரேசிலின் நிலைமை என்ன? அதிர்ச்சி தகவல்கள்…

Published: Saturday, Jun 20,2020 ,08:47:58am

உலகில் கொரோனா பரவத்தொடங்கியபோது, பல நாடுகளும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை பொதுமக்கள் நலனுக்காக அமல் படுத்தி வந்தன. ஆனால், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று சொல்லி அலட்சியமாக இருந்த பிரேசிலின் நிலைமைதான் என்ன?

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பிரேசிலில் ஒரே நாளில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதித்து இருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. ஒரே நாளில் 1271 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதற்கு அதிபர் ஜாய்ர் போல்சொனரோதான் காரணம் என்று அந்நாட்டு மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொரோனவை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் அதிபர் எடுக்கவில்லை எனவும், ஊரடங்கை அமல் படுத்தாததால் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு அவரே காரணமாக இருக்கிறார் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

உலகள்வில் கொரோனா பாதிப்பில் பிரேசில்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து பிரேசில் அதிபர் ஊரடங்கை அமல்படுத்துவதில் முரண்டு பிடித்துக் வருகிறார்.

ஊரடங்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே அவரது இந்த நிலைபாட்டிற்கு காரணம். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய சுகாதாரத்துறை அமைச்சரை அதிபர் ஜாய்ர் போல்சொனரொ பதவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலனை விட பொருளாதார நலனே முக்கியம் என்று எண்ணும் அதிபரை பெற்றிருக்கும் அந்நாட்டு மக்கள் பாவப்பட்டவர்களே.

வீடியோ செய்திகள்