jeevan-works-logo
booked.net
எம்எல்ஏ, சி.எம், மத்திய அமைச்சர்.. அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த சதானந்த கவுடா

பெங்களூரு: தென்னிந்திய பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் சதானந்த கவுடா ஆவார். தற்போது மோடியின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் தற்போதைய தட்சிண கன்னடா எனப்படும் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய சதானந்த கவுடா சட்டப்படிப்பை முடித்த பின்னர், 1976-ம் ஆண்டு சட்ட பயிற்சியை துவக்கினார். பின்னர், அவர் சுல்லியா மற்றும் புட்டூர் இரண்டிலும் பயிற்சி சட்டப்பயிற்சியை மேற்கொண்டார். டேட்டி என்பவரை மணந்த சதானந்த கவுடாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வீடியோ செய்திகள்