jeevan-works-logo
booked.net
வைத்திலிங்கமும் இல்லை.. ரவீந்திரநாத்தும் இல்லை.. அதிமுகவை சேர்க்காமல் கைவிட்ட பாஜக!

சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுகிறது. இருப்பினும் அதன் முழு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக காணப்படுகிறது கட்சி வட்டாரம். தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தது. முழுமையான வெற்றியை அது பெறாமல் போனதே அதற்குக் காரணம். மறுபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி, வாரணாசி என பிசியாக இருந்து வந்தார். இடைத்தேர்தலுக்கு இங்கே ஆளாளுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால், துணை முதல்வரை தமிழ்நாட்டிலேயே காணோம். மகனை அழைத்து கொண்டு வாரணாசி சென்றார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து சில பல விஷயங்களை விவாதித்தார். அப்போதே அதிமுகவில் முனுமுனுப்பு கிளம்பியது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-for-the-aiadmk-to-be-silent-352544.html

வீடியோ செய்திகள்