jeevan-works-logo
booked.net
என்னாது 10 காலாண்டிலும் நஷ்டமா.. ரிசர்வ் வங்கி PCA நடவடிக்கை மேற்கொள்ளுமா.. கவலையில் ஐ.டி.பி.ஐ

மும்பை : தொடர்ந்து 10 காலாண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கி, கடந்த மார்ச் காலாண்டிலும் வெற்றிகரமாக நஷ்டத்தில் தான் உள்ளதாம். அட ஆமாப்பு கடந்த ஜனவரி - முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.4,918 கோடி ரூபாயாக நஷ்டத்தினை சந்தித்துள்ளதாம் இந்த வங்கி. மக்களின் பணத்தினை வைத்து ரிஸ்க் எடுத்துள்ள எல்.ஐ.சிக்கு இது மிக பீதியை கொடுத்துள்ளதாம். அட ஆமாப்பு எல்.ஐ.சி சமீபத்தில் ஐ.டி.பி.ஐ வங்கியின் 51% பங்குகளை வாங்கியது. சுமார் 21,624 கோடி ரூபாயை முதலீடு செய்து அரசு நிறுவனமான எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ வங்கியை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வங்கி தொடர்ந்து 10 காலாண்டுகளாக நஷ்டத்தினையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ செய்திகள்