jeevan-works-logo
booked.net
ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து..! சிறப்பு ரயில்கள் கதி என்ன?

Published: Friday, Jun 26,2020 ,08:08:03am

ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில்,  நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

 இதனையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ரயில் சேவைகளை  ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கவும் தற்போதைக்கு அனுமதியில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

 ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டு கட்டணம் திருப்பி அளிக்கப் படுகிறது. எனினும் சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்