jeevan-works-logo
booked.net
நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது... JEE மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கதி என்ன..?

Published: Friday, Jun 26,2020 ,09:25:09am

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சிபிஎஸ்சி தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

எனவே ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில்  ஜூலை 26ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வையும் ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. 

 ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெற இருந்த நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர். எனவே ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்தி வைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 நீட் தேர்வுடன்  ஜூலை 19 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள JEE தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நீட் மற்றும் JEE தேர்வுகளை சூழலைப் பொறுத்து ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ செய்திகள்