jeevan-works-logo
booked.net
எந்தெந்த மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டித்துள்ளன..? தமிழத்தின் நிலை என்ன..?

Published: Saturday, Jun 27,2020 ,07:41:19am

சென்னையை தொடர்ந்து மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்லார். 

 மாவட்ட ஆட்சியர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தொற்று அதிகரித்த மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை அறிவித்து விட்டார்.  அதேபோல டெல்லியில் பள்ளிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அறிவித்து விட்டார்.  

ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப் படும் போதும் இது போன்ற நிலையே நீடிக்கிறது.  வட மாநிலங்களில்  முதலில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தேதி அறிவிக்கப்படுகிறது.  அவற்றை பின்பற்றியே தென் மாநிலங்களும்  ஊரடங்கு நீட்டித்து  தேதி  அறிவிக்கின்றன.   இதுவரை தொற்று குறையாத நிலையில்  தமிழக அரசு  என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை  29ம் தேதி தான் பார்க்க வேண்டும்.

வீடியோ செய்திகள்