jeevan-works-logo
booked.net
தற்கொலை செய்து கொண்ட டிக் டாக் பிரபலம். சரியும் மணல் கோட்டைகள்...

Published: Saturday, Jun 27,2020 ,08:05:17am

டிக் டாக் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் லட்சக்கணக்கான பாலோயர்கள் பிந்தொடர ஒரு நட்சத்திரமாக வலம் வந்த 16 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  டிக்டாக்கில் 1.1 மில்லியன் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்கின்றனர்.

டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில்  வெகு பிரபலமான ஷியா கக்கார் என்ற 16 வயது  பள்ளி மாணவி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. 

டெல்லியை சேர்ந்த 16 வயதான ஷியா கக்கார் லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் பகிரப்படும் ஒருவராவார். டெல்லியில் வசித்து வந்த ஷியா கக்கார் , அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த ஷியா கக்கார் , மொட்டை மாடியில் என்று நிறைய வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் பதிவேற்றி வந்தார். 

கடந்த வியாழக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு அவருடைய அறைக்கு சென்ற அவர் இரவு 9 மணி வரை கதவைத் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரவு உணவுக்கு அவரது பெற்றோர் அழைத்தபோது கதவைத் திறக்கவில்லை. இதனால் அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது போனையும் எடுக்க வில்லை.

 பயந்துபோன பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். ஷியா கக்கார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். தகவலறிந்து சென்ற டெல்லி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதத்தையும் எழுதி வைக்கவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர். ஷியா தக்காரது செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சியாவின் மேலாளர் அர்ஜுன் கூறுகையில், இந்த தற்கொலை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் எத்தனை  பேர்  நம்மை பின் தொடர்ந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தனியாகவே இருக்கிறோம்.  வலுவான உறவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.  மன அழுத்தத்திற்கோ,   கவலைக்கோ    ஆட்படும்போது  எந்த பாலோயரும் வந்து தோள் கொடுக்கப்போவதில்லை. நாம் உண்மையாக சேர்த்து வைத்திருக்கும் உறவுகளே அப்போது துணை நிற்கும். இந்த தலைமுறையின் போலி மணல் கோட்டைகள் சரியும் காலம் இது போலிருக்கிறது. 

வீடியோ செய்திகள்