jeevan-works-logo
booked.net
உலகளவில் ஒரு கோடியை நெருங்கியது கொரோனா தொற்று...

Published: Saturday, Jun 27,2020 ,08:14:20am

உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்தைக்  கடந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. 

 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி இருகிறார்கள்.  உயிரிழப்பு ஒன்றே கால் லட்சத்தை கடந்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கணக்கிடப்பட்டுள்ளது விட பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 25 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும், முதற்கட்ட பரிசோதனைகளில்  அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

 இதனால் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு தொற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

 பிரேசில் நாட்டிலும் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது அங்கும் ஒரே நாளில் 40 ஆயிரத்தை கடந்து  மொத்த பாதிப்பு 12 லட்சத்தை கடந்தது. ரஷ்யா பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரக் கூடிய நிலையில் மெக்சிகோ மற்றும் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 மெக்சிகோவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு கண்டறியப்படுகிறது. உயிரிழப்பும் புதிய உச்சத்தை அடைந்திருத்திருக்கிறது.

வீடியோ செய்திகள்