jeevan-works-logo
booked.net
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் ::: அரசு அறிவிப்பு..!!

Published: Saturday, Jun 27,2020 ,09:01:18am

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  பெரிய நிறுவனங்களும்  நல்ல  உள்ளம்  படைத்த  தனிநபர்களும்  கொரோனா நிவாரண நிதியை அரசுக்கு அளித்து வருகின்றனர்.   

கொரோனா பேரிடர் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் முழுமையான நன்கொடை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

 இந்த வழக்கில் இன்று பதிலளித்துள்ள தமிழக அரசு, முதல்வர் பொது நிவாரண திற்கு வரும் நிதியானது மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் தடுப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

 முதல்வர் நிவாரண நிதிக்கு காசோலை, வரைவோலை, இணையவழி செயலிகள் மூலம் நிதி வழங்கப்படுவதால் அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் இருப்பதாகவும், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை எனவும் விரைவில் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமர் நிவாரண நிதி குறித்து  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது பிரதமர் நிவாரண நிதி என்பது  அரசு சாரா அமைப்பு  ஆகையால்  அது குறித்து பதிலளிக்க வேண்டி அவர்  வேண்டிய  அவசியம் இல்லை  என்று  மத்திய அரசு பதிலளித்தது நினைவிருக்கலாம்.

வீடியோ செய்திகள்