jeevan-works-logo
booked.net
வேடந்தாங்கல் சரணாலயம் ஆக்கிரமிக்கப்படுகிறதா..? நிபுணர் குழு நியமனம்.

Published: Saturday, Jun 27,2020 ,09:07:12am

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா மருந்து நிறுவனம் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருப்பதாக எழுந்து இருக்கக்கூடிய குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

ஏற்கனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 5 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பிற்கு குறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்று தமிழக வனத் துறை விளக்கம் அளித்திருந்தது.  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு பரப்பினை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,  அதன்படி ஒரு கிலோ மீட்டர் Core Zone எனவும்,  2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை Buffer Zone, Eco Sensitive Zone எனவும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் எந்த குறைபாடும் இன்றி பறவைகள் நிர்வாகப் பகுதியாக திகழும் என கூறப்பட்டிருந்தது. 

 வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சன் பார்மா மருந்து நிறுவனம், அதன் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தது. பறவைகள் சரணாலயத்தில் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக சுருக்க தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.

 இந்த நிகழ்வுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னையை தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

 இது குறித்து விசாரணை மேற்கொண்ட தீர்ப்பாயம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தென்மண்டல பிரிவு அதிகாரி ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த நிபுணர் குழுவானது இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வீடியோ செய்திகள்