jeevan-works-logo
booked.net
தமிழகத்தில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்பு.. ஒரே நாளில் 68 பேர் பலியான பரிதாபம்.

Published: Sunday, Jun 28,2020 ,05:12:17am

தமிழகத்தில் கொரோனா தொற்று  உச்சம் தொட்டு வரும் நிலையில் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3713 பெயருக்கு தோற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த 8 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 81 பேரும் அடங்குவர். 

அரசு மருத்துவமனைகளில் 45 பேர், தனியார் மருத்துவமனைகளில் 23 பேர் என ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் உயிரிழப்பு 1025 ஆக அதிகரித்துள்ளது.

 ஒரே நாளில் அதிகபட்சமாக 2737 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். எனவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 32,068 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு இருகிறது..  இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 சென்னையில் ஒரேநாளில் 1939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மொத்த பாதிப்பு 51,699 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் செங்கல்பட்டில் 248 பேருக்கும் மதுரையில் 218 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 திருவள்ளூரில் 146 பேரும் திருவண்ணாமலையில் 127 பேரும் வேலூர் 118 பேரும், காஞ்சிபுரத்தில் 98 பேரும், ராணிப்பேட்டையில் 96 பேரும், ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 101 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஊரடங்கை அமல் படுத்தி வருகிறது.  இருப்பினும் தொற்று கட்டுக்கடங்காமல் சிறிய நகரங்களிலும் இப்பொழுது பரவத் தொடங்கி இருப்பது கவலை அளிக்கிறது.

வீடியோ செய்திகள்